Saturday, October 30, 2010

அந்நியனின் முதல் அத்யாயம்

அந்நியனின் முதல் அத்யாயம் ..
            இதுவரை சகோதரர்களிடமிருந்து 20 க்கும் மேற்ப்பட்ட மின் அஞ்சல்கள் வந்துள்ளது .அனைவரும் அவர்களது மன குமுறல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர் , கருத்துக்கு மதிப்பளித்து மின் அஞ்சல்  அனுப்பியவர்களுக்கு நன்றி .
இதோ துவக்கம்
         நண்பரின் மினஞ்சல் கேள்வி :உங்கள் தகவல் கண்டேன். நானும் --- ப்ளாக் எழுதுபவன்தான். நீங்கள் சொல்ல வருவது ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. அது பற்றி முழு விளக்கம் அனுப்பினால் அதன் சாராம்சம் புரியும். . மொக்கை பதிவை எழுதினாலும் பலருக்கு இருபதுக்கும் மேற்பட்ட ஓட்டுகள் விழுவதும், நல்ல பதிவை எழுதுபவர்களுக்கு ஒரு சில ஓட்டுகள் மட்டும் விழுவதும் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. குறிப்பாக இன்ட்லியில். என்னதான் நடக்கிறது அங்கே. தயவு செய்து விளக்கவும். நல்லவர்கள் சேர்ந்து அணி அமைக்கலாமா? அதற்கு முன் அனைவரும் இது பற்றி விவாதித்தல் நலம். இப்படி கேட்டிருக்கிறார் நம் சகோ ..
பதில்   :

                ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் அது எப்படி பதிவை இணைத்ததும் சில நிமிடங்களில் 5,6 என ஓட்டு விழுகிறது அடுத்த 2 மணி நேரத்தில் முதல் பக்கத்திற்கு வந்துவிடுகிறது ...புதியவர்கள் ,என பலர் எழுதினாலும் ஒரு சில ஓட்டு களே விழுகின்றன ..எல்லோருக்கும் இது ஆச்சர்யம் பாதி பேர் இதில் அடங்குவர் , மீதி இருப்பவர்கள் திறமைசாலிகள் , இதற்க்கு இன்ட்லியை ஒன்றும் குறை கூறமுடியாது , அவர்கள் என்ன செய்வார்கள் ..
        
                 முடிந்தவரை நீங்களும் ஒரு அணியை அமைத்துக்கொள்ளுங்கள் சில மாதங்கள் உழைத்தால் குறிப்பிட்ட நபர்கள் சேர்ந்ததும்  நீங்களும் நான் ஞாயிறு மதியம் தூங்கியது யன எழுத தொடங்கலாம் .  
       
            இதைவிட வருடத்திற்கு 6 முறை ஏதாவது பெயரில் விருது வழங்கி ஆள் சேர்க்கலாம் ..சரக்கு இல்லாமல் ஓட்ட அலேசா ரேங்க் முன்னிலை பெற இதுதான் வழி..
இல்லாவிட்டால் உங்கள் தள தேடலில் meta tag /keyword இல் உண்மைத்தமிழன் ,கேபிள் ,ஜாக்கி ,லோஷன் போன்ற சிறந்த பதிவர்களின் தளத்தை சேர்த்தால் googleதேடலில் புல்லுக்கும் ஆங்கே புசியுமாம் எனபது போல அவர்களின் தளத்தை தேடுபவர்களுக்கு உங்கள் தளம் கிடைக்க வாய்ப்பு .. இதுதான் மெகா திருட்டு ...இது நிச்சயம் உதவும் ..அவர்கள் ரத்தத்தை திருடி சுவைக்க இது சிறந்த வழி ... 

              பதிவர் நண்பர் என்று சொல்லி alexa வில் லட்சத்திற்கும் குறைவாக சென்ற அவரின்   தளம் மற்றும் பிறரின் தளங்களை  இவ்வாறு  போட்டு தனது தளத்திற்கு ஆள் சேர்க்கும் பதிவர் இதற்கு உதாரணம் நீங்களே கண்டுபுடிச்சி சொல்லுங்க பாப்போம்

இப்படி செய்தால் நீங்கள் alexa இல் மாதம் 5,6 பதிவுபோட்டு உழைப்பே இல்லாமல் நல்ல தரவரிசை பெறலாம் .
இன்னும் நேர்மையாக இதை செயல் படுத்த பிடித்த ரசித்த பதிவுகள் என 50 to 60 முக்கிய தளங்களின் பதிவை உங்கள் தலத்தில் போடுங்கள் நிச்சயம் பிரபலமாகலாம் .
         டிஸ்கி:  இப்படி பண்ணி ஒரு பொழப்பு தேவையா ..அப்படி பேர் வாங்கி என்ன சாதிக்கபோற  ஒரு நாள்  எல்லோருக்கும் உண்மை தெரிந்தால் உனக்கு ஆப்பு ...
உண்மை சில இடங்களில் எவ்வளவு  போராடினாலும் வெல்லமுடிவதில்லை ..
              அடுத்த பதிவு மிக கேவலமாக நடந்து ஒருவரை பதிவுலகிளிருந்தே விரட்டிய நாட்டமை பற்றியது ..காத்திருங்கள் ....   
          
          தன்னைப்போல் பிறரையும் நேசி....மின்னஞ்சல் அனுப்பியவரை பற்றி யாரும் யஊகிக்க முடியாதவகையில் பிரசுரிக்கப்படும் இந்த பதிவை போல ...

நண்பர் சசி பற்றிய எனது போராட்டத்திற்கு ஆதரவளித்த ,கருத்துக்கள் கூறிய  அனைவர்க்கும் நன்றி  .சசி அவர்களால் தொழில்நுட்பத்தை புதிதாக கண்டுபிடித்து சொல்ல முடியாது ,நல்ல தகவல்களை அவராகவோ ,நண்பர்களிடமிருந்தோ , படித்தோ தான் தமிழில் பகிந்து கொள்கிறார் .ஆங்கில தளத்தின் கோப்பி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது ,அங்கிருந்து பகிர்துகொள்கிறார் அவ்வளவுதான் ..
.

3 comments:

 1. நண்பரே! நீங்கள் கோவையா?

  ReplyDelete
 2. நீ சிரித்தாள் தீபாவளி
  அதை நான் ரசித்தால் போகுமே வலி
  புத்தாடையுடுத்தி
  பல வண்ணக் கலரில் மத்தாப்பு கொளுத்தி.
  பலவகை இனிப்போடு
  புது வகை பூரிப்போடு
  பஜனை பாடியப் பிறகு
  டமால் ....டமால் ..வெடிசத்தம்.

  உற்றார் உறவினர் ஒரு பக்கம்
  நண்பர் நண்பிகள் மறு பக்கம்
  இதனைக் காணும் கண்களுக்கு
  காணக் கிடைக்காத வரப் பிரசாதம்
  மகிழ்ச்சி அடையும் இதயம்ங்கள்
  வாழ்த்து சொல்லுகிறேன் எல்லோருக்கும்.

  அன்பை நேசி அழகு பெறுவாய்
  அறிவை நேசி உயர்வு பெறுவாய்
  அன்னையே நேசி சாந்தம் அடைவாய்
  அன்பினால் மனைவியை நேசி
  அருமையான வாழ்க்கை பெறுவாய்

  அகம் மகிழ மழலையே நேசி
  சுகம் பல கிடைத்து சொர்க்கம் காண்பாய்
  மதங்களை மறந்து மனிதனை நேசி
  மண்ணுக்குள் போகும் வரை, மாணிக்க கல்லாக ஜொலிப்பாய்.

  இந்தத் திருநாளில் ஆணிலிருந்து பெண்ணுகள் வரை
  ஒற்றுமையுடனுடன் ஓரினந்து, நாட்டு நலனில் அக்கறையோடு
  ஜாதி மதம் பேதமின்றி,ஜனத்தொகையைக் கணக்கில் கொண்டு
  அனைவரும் நீண்ட காலம் நோயின்றி,பிறர் கண்ணீரின்றி,சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 3. எழுத நேரமில்லை, அதுனால உங்களை மாதிரி யார்கிட்டயாவது வாங்கி பதிவு போடலாமா!?

  ReplyDelete