Saturday, October 30, 2010

அந்நியனின் முதல் அத்யாயம்

அந்நியனின் முதல் அத்யாயம் ..
            இதுவரை சகோதரர்களிடமிருந்து 20 க்கும் மேற்ப்பட்ட மின் அஞ்சல்கள் வந்துள்ளது .அனைவரும் அவர்களது மன குமுறல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர் , கருத்துக்கு மதிப்பளித்து மின் அஞ்சல்  அனுப்பியவர்களுக்கு நன்றி .
இதோ துவக்கம்
         நண்பரின் மினஞ்சல் கேள்வி :உங்கள் தகவல் கண்டேன். நானும் --- ப்ளாக் எழுதுபவன்தான். நீங்கள் சொல்ல வருவது ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. அது பற்றி முழு விளக்கம் அனுப்பினால் அதன் சாராம்சம் புரியும். . மொக்கை பதிவை எழுதினாலும் பலருக்கு இருபதுக்கும் மேற்பட்ட ஓட்டுகள் விழுவதும், நல்ல பதிவை எழுதுபவர்களுக்கு ஒரு சில ஓட்டுகள் மட்டும் விழுவதும் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. குறிப்பாக இன்ட்லியில். என்னதான் நடக்கிறது அங்கே. தயவு செய்து விளக்கவும். நல்லவர்கள் சேர்ந்து அணி அமைக்கலாமா? அதற்கு முன் அனைவரும் இது பற்றி விவாதித்தல் நலம். இப்படி கேட்டிருக்கிறார் நம் சகோ ..
பதில்   :

                ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் அது எப்படி பதிவை இணைத்ததும் சில நிமிடங்களில் 5,6 என ஓட்டு விழுகிறது அடுத்த 2 மணி நேரத்தில் முதல் பக்கத்திற்கு வந்துவிடுகிறது ...புதியவர்கள் ,என பலர் எழுதினாலும் ஒரு சில ஓட்டு களே விழுகின்றன ..எல்லோருக்கும் இது ஆச்சர்யம் பாதி பேர் இதில் அடங்குவர் , மீதி இருப்பவர்கள் திறமைசாலிகள் , இதற்க்கு இன்ட்லியை ஒன்றும் குறை கூறமுடியாது , அவர்கள் என்ன செய்வார்கள் ..
        
                 முடிந்தவரை நீங்களும் ஒரு அணியை அமைத்துக்கொள்ளுங்கள் சில மாதங்கள் உழைத்தால் குறிப்பிட்ட நபர்கள் சேர்ந்ததும்  நீங்களும் நான் ஞாயிறு மதியம் தூங்கியது யன எழுத தொடங்கலாம் .  
       
            இதைவிட வருடத்திற்கு 6 முறை ஏதாவது பெயரில் விருது வழங்கி ஆள் சேர்க்கலாம் ..சரக்கு இல்லாமல் ஓட்ட அலேசா ரேங்க் முன்னிலை பெற இதுதான் வழி..
இல்லாவிட்டால் உங்கள் தள தேடலில் meta tag /keyword இல் உண்மைத்தமிழன் ,கேபிள் ,ஜாக்கி ,லோஷன் போன்ற சிறந்த பதிவர்களின் தளத்தை சேர்த்தால் googleதேடலில் புல்லுக்கும் ஆங்கே புசியுமாம் எனபது போல அவர்களின் தளத்தை தேடுபவர்களுக்கு உங்கள் தளம் கிடைக்க வாய்ப்பு .. இதுதான் மெகா திருட்டு ...இது நிச்சயம் உதவும் ..அவர்கள் ரத்தத்தை திருடி சுவைக்க இது சிறந்த வழி ... 

              பதிவர் நண்பர் என்று சொல்லி alexa வில் லட்சத்திற்கும் குறைவாக சென்ற அவரின்   தளம் மற்றும் பிறரின் தளங்களை  இவ்வாறு  போட்டு தனது தளத்திற்கு ஆள் சேர்க்கும் பதிவர் இதற்கு உதாரணம் நீங்களே கண்டுபுடிச்சி சொல்லுங்க பாப்போம்

இப்படி செய்தால் நீங்கள் alexa இல் மாதம் 5,6 பதிவுபோட்டு உழைப்பே இல்லாமல் நல்ல தரவரிசை பெறலாம் .
இன்னும் நேர்மையாக இதை செயல் படுத்த பிடித்த ரசித்த பதிவுகள் என 50 to 60 முக்கிய தளங்களின் பதிவை உங்கள் தலத்தில் போடுங்கள் நிச்சயம் பிரபலமாகலாம் .
         டிஸ்கி:  இப்படி பண்ணி ஒரு பொழப்பு தேவையா ..அப்படி பேர் வாங்கி என்ன சாதிக்கபோற  ஒரு நாள்  எல்லோருக்கும் உண்மை தெரிந்தால் உனக்கு ஆப்பு ...
உண்மை சில இடங்களில் எவ்வளவு  போராடினாலும் வெல்லமுடிவதில்லை ..
              அடுத்த பதிவு மிக கேவலமாக நடந்து ஒருவரை பதிவுலகிளிருந்தே விரட்டிய நாட்டமை பற்றியது ..காத்திருங்கள் ....   
          
          தன்னைப்போல் பிறரையும் நேசி....மின்னஞ்சல் அனுப்பியவரை பற்றி யாரும் யஊகிக்க முடியாதவகையில் பிரசுரிக்கப்படும் இந்த பதிவை போல ...

நண்பர் சசி பற்றிய எனது போராட்டத்திற்கு ஆதரவளித்த ,கருத்துக்கள் கூறிய  அனைவர்க்கும் நன்றி  .சசி அவர்களால் தொழில்நுட்பத்தை புதிதாக கண்டுபிடித்து சொல்ல முடியாது ,நல்ல தகவல்களை அவராகவோ ,நண்பர்களிடமிருந்தோ , படித்தோ தான் தமிழில் பகிந்து கொள்கிறார் .ஆங்கில தளத்தின் கோப்பி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது ,அங்கிருந்து பகிர்துகொள்கிறார் அவ்வளவுதான் ..
.

Thursday, October 28, 2010

பதிவுலகின் திருடர்கள் , கருங்காலிகள் பற்றி தொடர்


    பதிவுலகின் திருடர்கள் , கருங்காலிகள் பற்றி வாரம் வாரம் ஒரு தொடர் எழுத முனைந்துள்ளேன் என்னுடைய அனுபவத்தில் பதிவுலகில் நல்லவன் போல காட்டிகொண்டிருக்கும் மோசடிமன்னர்களை பற்றி எழுதுகிறேன் ஆணித்தனமான ஆதாரங்களுடன் மட்டும்.

பதிவை வைத்து நாம் பலரின் மேல் நல மரியாதை வைக்கிறோம் முகம் தெரியாமல் , பழகாமல் கூட , அதில் ஒரு சிலர் அத்தகைய மரியாதைக்கு உரியவர்கள் அல்ல .அந்த ஒரு சிலர் பற்றிய தொடர் .முகம் காணாமல் பலர் பதிவுலகின் மூலம் பரிச்சயமாகி பல உதவிகள் செய்து வருகின்றனர் அவர்கள் எல்லாம் இறைவன் கொடுத்த அருள் நமக்கு , அத்தகையவர்கக்ளின் ஊடே உள்ள கறுப்பாடுகள் பதிவுலக அரசியல் , தனக்கு வேண்டியவர்களை வளர்த்து விட்டு மற்றவர்களை மிதிக்கும் மற்றும் புதியவர்களை வளரவிடாமல் நசுக்கும் ஒரு சில கருங்காலிகளின் சுய முகத்தை துகிலுரிக்கும் தொடர் , உங்களின் அனுபவங்களை மெயில் மூலம் அனுப்புங்கள் உங்களின் பெயர் பிரசுரிக்கபடமாட்டது , உங்களுக்கு பதிப்பு ஏற்படாத வகையில் வெளியிடப்படும் எனபது நிச்சயம் .இது யாரையும் புண்படுத்த அல்ல ..உண்மையான பதிவர்களை பாராட்டி போலிகளை துகிளுரிக்கமட்டுமே .குறிப்பாக நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றும் மிருகங்களை உலகிற்கு காட்ட இந்ததளம் ...
 உங்களின் மேலான ஆதரவு வேண்டி ..
அந்நியன் .....